பாரம்பரிய விவசாயம்
முன்னர் ஒரு ஊர் அல்லது ஒரு பிரதேசத்தில் தலைமைத்துவம் வகிக்க ஒருவர் இருந்தார். அவரை பண்ணையார் என்று அழைத்தனர். அப் பிரதேசத்தில் எவருக்கேனும் கஷ்டம் ஏற்படும் போது உதவுவது பண்ணையாரின் பழக்கம் ஆகும்.
கிராமவாசிகள் பண்ணையாரின் தலைமையில் கால நேரம் பார்த்து விவசாயம் செய்வார். முதலில் அனைவரையும் ஒன்றுசேர்த்து வயலின் கால்வாய்களை சுத்தம் செய்து களைகளை எரிப்பார்கள். வரட்சி காலத்தின் முடிவை தொடர்ந்து கோடை மழை வந்ததும் உழுதல், வரம்புகள் கட்டுதலை மேற்கொள்வர். முதல் பண்படுத்தலை மேற்கொண்டு 9-12 நாட்கள் நீர் நிரப்பி வைப்பர். எல்லா களைகளும் அழுகி அழிந்து போகும். பிறகு இரண்டாவது பண்படுத்தல் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் 7 நாட்கள் நீர் நிரப்பி வைக்கப்படும். எல்லா களைகளும் அழுகி அழிந்து விடும் அனைவரும் ஒன்று சேர்ந்து நெல்லை விதைப்பார்கள்.
அப்பாவி ஏழை ஒருவர் எனின் அவருக்காக உண்ணாமல் குடிக்காமல் வயல் விதைத்து கொடுப்பார்கள். அவ் வருடம் அவர் வாழ்வதற்கு தேவையான உணவு ஏற்பாடு செய்து தரப்படும். அடுத்து பாத்தியில், அதாவது 3 நாட்கள் நீர் நிரப்பி சேற்றை கழுவி விடுவதாகும். மீண்டும் 5 நாட்கள் வரை நீர் நிரப்பி வைப்பர். பூச்சித் தாக்கங்களை தடுப்பதற்கு வயலில் பிரதான கால்வாயில் அல்லது இலுப்பை மரத்தை நடுவர்.
இதனால் வேர், இலை கழுவலினால் வயலுக்கு அடித்து வரப்படும் நீரினால் பூச்சித் தாக்கங்களை தடுக்கலாம். மேலும் நன்றாக வெயில் உள்ள போது களத்தில் நீர் நிரப்பி வைப்பர். இளம் நெற்பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகள் நீர் வெப்பமடைவதனால் அழிந்து விடும். பூச்சி தாக்கத்தை தடுப்பதற்கு வக்கடையில் கூனியை நாட்டி, புற் பூண்டுகளை நசுக்கி அவற்றில் கூனியை கட்டுவர்.
வக்கடையிலிருந்து வரும் நீரினால் அவை கழுவப்பட்டு களத்தில் அந்நீர் தேங்கும். வக்கடையை உடைத்து நீரை அகற்றக் கூடாது. முற்காலத்தில் அதில் சதுரக்கள்ளி பாலை இடுவர். 2 அங்குலம் வரை பாத்தியில் நீரை நிரப்பி சதுரக்கள்ளி பாலை இட வேண்டும். நெல் மூட்டுப்பூச்சிகளால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த கற்பூரவள்ளி, மடுபண்ணையின் பூக்களை பாத்தியில் ஒவ்வொரு இடத்தில் வைப்பர். அவற்றின் துர் நாற்றத்தால் மூட்டுப்பூச்சிகள் வருவதில்லை.
நெல் பூக்கும் காலத்தில் அதில் தேனீக்கள் மகரந்தத்தை சேகரிப்பதனால் நெல் விதை மணிகள் பூரணமாக நிரம்பி விடும். இதன் நற்குணம் தெரிந்த பெரியவர்கள் காலை வேளையில் நெல் மூட்டுப்பூச்சிகளுக்கு பூச்சிநாசினி பிரயோகிக்காதிருக்கக் காரணம், தேனீக்கள் காலை வேளையில் மகரந்தம் சேகரிப்பதனால் ஆகும். அன்று மனிதர் மரம், இலைகுலை, ஆறு, ஏரிகளை பாதுகாத்தான். இன்று அவற்றை நேசிக்காத சமூகம் உருவாகியுள்ளதால் இயற்கை சூழல், நமக்கு தடையாக உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக